Saturday, December 9, 2023
HomeTamilஅத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

நாடளாவிய ரீதியில் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச 3 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

இதன்படி, சிவப்பு பருப்பு, டின் மீன் மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஆகியவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கிராம் சிவப்பு பச்சை அரிசி 5 ரூபாவாலும், ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பு 9 ரூபாவாலும், அடைக்கப்பட்ட மீன் ( 425 கிராம்) 45 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு கிலோகிராம் சிகப்பு பருப்பு 389 ரூபாவிற்கும், 425 கிராம் அடைக்கப்பட்ட மீன் 540 ரூபாவிற்கும், ஒரு கிலோகிராம் சிவப்பு பச்சை அரிசி 205 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக லங்கா சதொச குறிப்பிட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக வாடிக்கையாளர்கள் இந்த விலையில் குறித்த பொருட்களை கொள்வனவு செய்யலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular