இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 500 ஓட்டங்களுக்கு மேல் குவித்து உலக சாதனை படைத்துள்ளது.
ICC உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டம் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, மோசமான வெளிச்சம் காரணமாக முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்ட போது 75 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 506 ஓட்டங்களை பெற்றுள்ளது.
ஆனால், இலங்கையின் சாதனை இன்னிங்ஸிலிருந்து 3 ஓட்டங்களுக்கு முன்னதாக நிறுத்தியதால், டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் அதிக ஓட்டங்களை குவித்த அணி என்ற உலக சாதனையை இங்கிலாந்து அணியால் முறியடிக்க முடியவில்லை.
பங்களாதேஷ் அணிக்கு எதிராக இலங்கை அணி 104 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 509 ஓட்டங்களை பெற்று ஏற்கனவே சாதனை படைத்தது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் தவிர மற்ற நான்கு துடுப்பாட்டக்காரர்களும் 100 ஓட்டங்களை கடந்தமை மற்றுமொரு சிறப்பு அம்சமாகும்.