Monday, December 11, 2023
HomeTamilஎரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!

எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!

டிசெம்பர், முதலாம் திகதி முதல் 1 இலட்சம் சிலிண்டர்களை நாளாந்தம் சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க, நாளாந்தம் தலா 40,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என்றும் ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் இன்றையதினம் (27) சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, நாளை முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை வரையறுக்கப்பட்ட அளவிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலங்களில் அதிக கேள்வி இருப்பதாலும், முற்பதிவு செய்யப்பட்ட எரிவாயு கப்பல்கள் நாட்டுக்கு வருவதில் ஏற்பட்ட தாமதமும், வரையறுக்கப்பட்ட விநியோகத்துக்கு காரணம் என்று நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

4,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று எதிர்வரும் 30ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அதைத் தரையிறக்கிய பின்னர், விநியோகம் வழமைக்குத் திரும்பும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு டிசெம்பர் மாதத்தில் 34,000 மெற்றிக்தொன் சமையல் எரிவாயுவுக்கான முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனவரி வரை கப்பல்கள் தொடர்ந்து வருகைதரும் என்றும் அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular