சீனாவினால் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட 10,000 மெற்றிக் தொன் அரிசி கையளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அதன் இறுதிப் பகுதியான 1,000 மெற்றிக் தொன் அரிசியுடன் கொள்கலன் கப்பல் நேற்று (19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இலங்கையில் உள்ள 7,900 பாடசாலைகளுக்கு ஒரு மில்லியன் மாணவர்களின் போசாக்கு தேவைக்காக குறித்த அரிசி இருப்பு விநியோகிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.