Wednesday, July 24, 2024
HomeTamilதுப்பாக்கிச் சூடு:நான்கு வயது சிறுவன் உயிரிழப்பு!!

துப்பாக்கிச் சூடு:நான்கு வயது சிறுவன் உயிரிழப்பு!!

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து பல நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

காலி – யக்கலமுல்ல, களுவலகல, மகேதர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த 19ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று உந்துருளியில் வந்த மூவர் வீட்டில் இருந்த நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த குறித்த துப்பாக்கிச் சூட்டில் சிறுவனும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.

பல நாட்களாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அந்த சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular