பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலை இன்று (31) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் நிறையுடைய பாண் மற்றும் ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சந்தையில் கோதுமை மாவின் கையிருப்பு போதியளவில் உள்ளமையால், நிறைவேற்று குழு கூடி பாண் விலையினை குறைப்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக, அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர், என்.கே ஜயவர்தன தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, கோதுமை மாவின் கையிருப்பு போதுமானளவு இருந்தால், பாண் விலையினை குறைக்க முடியும் என வெதுப்பக உரிமையாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நிலையில், பாணின் விலையினை குறைப்பதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.