Monday, December 4, 2023
HomeTamilநாளை முதல் பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் அதிகரிப்பு!!!

நாளை முதல் பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் அதிகரிப்பு!!!

தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் அமைச்சரவை அனுமதியுடன் நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, முதல் தடவையாக தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க 200 ரூபாய்

காலாவதியான தேசிய அடையாள அட்டையை புதுப்பிக்க விண்ணப்பிப்பதற்கு 200 ரூபாய்

தொலைந்துபோன தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள விண்ணப்பிப்பதற்கு 1000 ரூபாய்

தேசிய அடையாள அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ள விண்ணப்பிப்பதற்கு 500 ரூபாய்

ஒரு நாள் சேவையினூடாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள (விண்ணப்ப கட்டணமின்றி) 2000 ரூபாய்.

தேசிய அடையாள அட்டையை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்துக்கொள்ள 2000 ரூபாய்.

புகைப்பட நிலையங்களில் பதிவு செய்வதற்கு 15000 ரூபாய்.

புகைப்படத்தினை பதிவு செய்யும் பணியை புதுப்பித்தல் (இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை) 3000 ரூபாய் என அதிகரிக்கப்படவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular