Monday, December 11, 2023
HomeTamilநீரில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு!!

நீரில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு!!

ஏறாவூர் பகுதியில் தாமரைக்கேணியில் நேற்று மாலை சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிறுவர்கள் பலருடன் தாமரைக்கேணியில் நீராடிக் கொண்டிருக்கும் போதே சிறுமி நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு மரணமடைந்த சிறுமி ஏறாவூர் தக்வா பள்ளி வீதியைச் சேர்ந்த மர்சூக் பாத்திமா றினா என்பவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சிறுமியின் உடலை திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் சென்று பார்வையிட்டு, சடலத்தை பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு காவல்துறையினருக்கு கட்டளை பிறப்பித்தார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular