பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் நாட்களில் பாடசாலை மாணவர்களுக்கு பாராளுமன்றத்திற்கு வருகை தருவதற்கும் விவாதங்களை பார்வையிடுவதற்கும் சந்தர்ப்பம் வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு அனுமதியளித்துள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ முன்வைத்த பிரேரணைக்கே இவ்வாறு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்படி, பாராளுமன்ற அலுவகத்தில் உள்ள பொது கலரியில் இருந்து பாராளுமன்ற விவாதங்களை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலை அதிகாரிகள் தங்களது விண்ணப்பத்தை படைக்கலசேவிதருக்குக் கடிதம் மூலமாகவும் 011 2777 473 அல்லது 011 2777 335 என்ற தெலைநகல் இலக்கங்கள் மூலமாகவும் சமர்ப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.