Monday, December 11, 2023
HomeTamilபுகையிரதத்தில் மோதி ஒருவர் பலி!!

புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி!!

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் புகையிரதத்தில் மோதிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கனரகராயன்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழில் இருந்து இன்று (31) காலை கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் கனகராயன்குளம் பகுதியில் பயணித்த போது புகையிரதப் பாதையில் ஆண் ஒருவருடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து இடம்பெற்ற நிலையில் தலை, கைகள், கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் குறித்த ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உடனடியாக புகையிரதத் திணைக்களத்தினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து சடலத்தை மீட்டு கனகராயன்குளம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

மீட்கப்பட்ட ஆண் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதால் மரணமடைந்ததாரா? அல்லது ஏற்கனவே தாக்கப்பட்டு புகையிரதப் பாதையில் போடப்பட்டுள்ளரா என்ற அடிப்படையில் கனரகராயன்குளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த சடலம் சேட் இன்றி கறுப்பு காற்சட்டை அணிந்தவாறு காணப்படுவதுடன், கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் இல்லை எனவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular