டீசல் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டீசல் விலையில் கணிசமான அளவு குறைக்கப்படாததால் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலையை 10 ரூபாவினால் குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தது.
லங்கா IOC நிறுவனமும் டீசலின் விலையை 10 ரூபாவால் குறைத்துள்ளதுடன், அதன் புதிய விலை 420 ரூபாவாகும்.