Wednesday, July 24, 2024
HomeTamilபொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகிறது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கமைவாக இந்தத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்று நள்ளிரவு 12 மணி வரை விண்ணப்பிக்க முடியும்.

29 மாநகர சபைகள், 36 நகர சபைகள் உட்பட 275 பிரதேச சபைகளுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக தேர்தல் நடைபெறவுள்ளது.

வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை கடந்த 21 ஆம் திகதி நண்பகலுடன் நிறைவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பான முறைப்பாடுகளை தொலைபேசி/ தொலைநகல்/ வைபர் மற்றும் வாட்ஸ்அப் மூலமாகவும், மின்னஞ்சல் மற்றும் முகநூல் மூலமாகவும் தெரிவிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இராஜகிரிய தேர்தல் செயலகத்தின் இரண்டாவது மாடியில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையத்துடன் தொடர்புகொள்ள 011 2860056, 011 2860059, 011 2860069 தொலைபேசி இலக்கங்கள் தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்த முடியும்.

பெக்ஸ் இலக்கங்கள் – 011 2860057, 011 2860062,

வைபர்/ வாட்ஸ்அப் – 0719160000 (R)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular