நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்கள் ஆபத்தான சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கண்டி மாவட்டத்தின் கங்காவத்தை கோரல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரதேச மக்கள் மண்சரிவு தொடர்பில் மிகவும் அவதானமான இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.
ஆகவே மண் சரிவு அபாயம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படும் பிரதேசங்களிலிருந்து மக்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த எச்சரிக்கை 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்குமென்றாலும் தொடர்ந்து மழைபெய்தால் அவ்வெச்சரிக்கை நீடிக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.