2022ம் ஆண்டுக்கான கல்விப் பொதுதராதர உயர் தர பரீட்சைக்கான பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது இந்த மாதம் 17ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை, எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகி, பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இத் தடையை மீறியவர்கள் தொடர்பில், காவல்துறை அவசர பிரிவு தொலைபேசி இலக்கம் , அத்துடன் பரீட்சைகள் திணைக்களம் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரச பாடசாலைகளுக்கான இலவச பாடப் புத்தகங்களை அச்சிடும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
அதன்படி, 300க்கும் அதிக வகையான பாடப் புத்தகங்களின், 43 மில்லியன் பிரதிகள் அச்சிடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள புதிய கல்வி ஆண்டுக்காக குறித்த பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் எதிர்ப்பார்ப்பில் அவற்றை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக அதிபர் தெரிவித்துள்ளார்.