Saturday, December 9, 2023
HomeTamil22 க்கு ஆதரவு - அரசாங்கத்தை பலப்படுத்துவது நோக்கம் அல்ல - முன்னாள் ஜனாதிபதி

22 க்கு ஆதரவு – அரசாங்கத்தை பலப்படுத்துவது நோக்கம் அல்ல – முன்னாள் ஜனாதிபதி

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் மக்களுக்கு நன்மை பயக்கும் என்று கருதுவதால் அதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.

22 ஆவது திருத்தம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது முன்னாள் ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், அரசாங்கத்தை பலப்படுத்தவே நாங்கள் 22ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்கிறோம் என்று சிலர் கூறலாம். மக்கள் தரப்பில் முற்போக்கான திருத்தம் என்பதாலேயே நாங்கள் திருத்தத்திற்கு வாக்களிக்கிறோம்.

அரசியலமைப்பு திருத்தங்களை நிறைவேற்றுவதன் மூலம் மாத்திரம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாது.

எனவே, உரம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular