Wednesday, December 6, 2023
HomeTamil48% முதியவர்கள் தனிமையில்!!!

48% முதியவர்கள் தனிமையில்!!!

இலங்கையில் வயோதிபர்களில் ஆறு முதல் ஏழு வீதமானோர் டிமென்ஷியா நோயாளர்களாக மாறியுள்ளதாக இலங்கை முதியோர் சங்கத்தின் செயலாளர் டொக்டர் மல்ஷா குணரத்ன தெரிவித்தார்.

மேலும், தற்போது இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால், வீட்டில் உள்ள முதியவர்கள் தனிமையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

கடந்த 1ஆம் திகதி சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு முதியோர் சமூகத்தின் சுகாதார மேம்பாடு, நோய்களில் இருந்து அவர்களைத் தடுப்பதுடன், முதிர்வயதை ஆரோக்கியமாக கழிப்பது தொடர்பாக நேற்று (04ஆம் திகதி) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஹிக்கடுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் நாற்பத்தெட்டு வீதமான வயோதிபர்கள் தனிமையில் தவிப்பதாக இங்கு நிபுணர் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அதிகளவான முதியோர்கள் மேல் மாகாணத்தில் இருப்பதாக சனத்தொகை புள்ளிவிபர திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

முதியவர்கள் மீது குடும்பத்தினர் அக்கறை காட்ட வேண்டும்.

மேலும் அகிகளவு மருந்துகளை வயது முதிர்ந்தவர்களுக்கு கொடுக்கும்போது அது வேறு கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதன் விளைவாக, வயதானவர்களுக்கு உடல் கோளாறுகள் மற்றும் டிமென்ஷியா போன்ற மனநல கோளாறுகள் ஏற்படுகிறது வேண்டும் தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular