சீன சந்தையில் வளரும் நாடுகள் பிரவேசிக்க சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி புதிய மற்றும் புதுமையான சந்தர்ப்பங்களை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உலகின் முதல் மற்றும் மிகப்பெரிய இறக்குமதி பொருட்காட்சியான 5 ஆவது சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியின் தொடக்க விழாவில் ஜனாதிபதி உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதேபோல், இலங்கை – சீனா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கலந்துரையாடல்கள் எமது பொருளாதார உறவுகளை விரைவில் மறுசீரமைக்கும் என்று நம்புவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பின்க் உள்ளிட்ட அந்நாட்டு மாநில தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.