Friday, December 8, 2023
HomeTamilசிறுவர்கள் சம்பந்தப்பட்ட வருடாந்தம் 5,000 குற்றச்செயல்கள் பதிவு!

சிறுவர்கள் சம்பந்தப்பட்ட வருடாந்தம் 5,000 குற்றச்செயல்கள் பதிவு!

இலங்கையில் வருடாந்தம் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட சுமார் 5,000 குற்றச்செயல்கள் பதிவாகுவதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பாவனை மற்றும் கைத்தொலைபேசிகளின் பாவனையே இவ்வாறான பல குற்றச் சம்பவங்களுக்கு வழிவகுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எமது நாட்டில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ள போதைப்பொருள் பிரச்சினையே சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு மிகப்பெரிய காரணியாகும்.

இலங்கையில் அதிக சனத்தொகை கொழும்பு, மேல் மாகாணம், கம்பஹா, களுத்துறை மாவட்டமாகும்.

ஏனெனில் இந்த பகுதிகளில் பதிவாகும் சிறுவர்கள் தொடர்பான குற்றங்கள் பற்றி எங்களுக்குத் தெரியும், மேலும் பெரும்பாலான சம்பவங்கள் போதைப்பொருள் மற்றும் மது பாவனையால் ஏற்படுகின்றன.

இதேவேளை, கையடக்கத் தொலைபேசிகள் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு இட்டுச் செல்லும் ஆபத்தான ஆயுதமாக மாறியுள்ளது. இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகத்தை குறைக்க நாம் முயற்சி எடுத்தால், பெற்றோர்கள் கண்டிப்பாக வீட்டில் கையடக்கத் தொலைபேசி பாவனையை கட்டுப்படுத்த வேண்டும்.” என தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular