சர்வதேச கடல் எல்லையில், மீன்பிடி மற்றும் சட்டவிரோத கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய கடலோர காவல் படையினர் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்த சோதனையின் போது, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் ஒரு சம்பவமாக எல்லைத் தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 8 இலங்கை மீனவர்கள் கைதாகியுள்ளனர்.
அவர்கள் மண்டபம் பொலிஸில் ஒப்படைக்கப்படவுள்ளனர். இதேவேளை, இந்தியாவில் இருந்து மஞ்சள் மற்றும் கடல் அட்டைகள் என்பனவற்றை இலங்கைக்கு கடத்துவதற்கு முற்பட்ட போது, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சந்தேகநபர்கள் பயணித்த படகுகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளன.