ஹெரோய்ன் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஈரான் நாட்டைச் சேர்ந்த 9 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் வியாழக்கிழமை (12)ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
இலங்கையின் எல்லைக்குள் ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் குறித்த ஈரானியர்கள் ஒன்பது பேருக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா ஆயுள் தண்டனை விதித்தார்.
குற்றவாளிகள் 9 பேரும் 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதி அக்குறள பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்களிடமிருந்து கடற்படையினர் 100 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப் பொருளை கைப்பற்றினர்.