Monday, December 4, 2023
HomeTamil'சார்பட்டா பரம்பரை' இரண்டாம் பாகம் விரைவில் - அப்டேட் கொடுத்த ஆர்யா

‘சார்பட்டா பரம்பரை’ இரண்டாம் பாகம் விரைவில் – அப்டேட் கொடுத்த ஆர்யா

பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. இப்படத்தில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடித்திருந்தார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் நடித்த பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

1960- களில் வடசென்னையில் உள்ள இடியாப்ப பரம்பரை மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய இரண்டு குழுக்களுக்கும் இடையிலான மோதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில் அந்த பகுதியில் உள்ள குத்துச்சண்டை கலாச்சாரத்தையும் அதில் உள்ள அரசியலையும் காட்டியிருந்தனர். மேலும், சார்பட்டா பரம்பரை பட காட்சிகளை வைத்து பல மீம்களும் சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘சார்பட்டா பரம்பரை’ இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது. பா.இரஞ்சித் இயக்கும் இப்படத்தை நாட்ஸ் ஸ்டுடியோஸ், நீலம் புரொடக்ஷன்ஸ், தி ஷோ பீபுள் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

இதனை நடிகர் ஆர்யா தனது சமூக வலைதளத்தில் ‘Match பாக்க ready-யா? ரோஷமான ஆங்கில குத்துச்சண்ட Round 2’ என்று குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular