Sunday, December 10, 2023
HomeTamilமாஸ்டர் பிளான் போடும் அட்லீ!!

மாஸ்டர் பிளான் போடும் அட்லீ!!

‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமான அட்லீ, அதன் பின்னர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கினார்.

இவர் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’.நயன்தாரா நாயகியாக நடித்திருந்த இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பான் இந்தியா படமாக உருவான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை குவித்து பாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளியது. இதையடுத்து அட்லீ அடுத்தது எந்த நடிகருடன் இணையவுள்ளார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் அட்லீ, அஜித்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அட்லீ, “ஆரம்பம் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை நயன்தாரா மூலமாக அஜித்தை சந்தித்தேன்.

அப்போது அவர் என்னை பார்த்ததும் பள்ளி படிப்பை முடித்துவிட்டாயா? என்று கேட்டார்.

என் கஷ்டமான நாட்களில் அவர் எனக்கு ஆறுதலாக இருந்தார். அஜித் சாருக்காக பயங்கரமான ஒரு கதையை ரெடி செய்துள்ளேன். அவர் ஓகே என்று சொல்லிவிட்டால் படப்பிடிப்பை தொடங்கிவிடலாம்” என்று பேசியதாக கூறப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular