Sunday, December 10, 2023
HomeTamilதாய் கண்டித்ததனால் உயிரை மாய்த்த சிறுவன்!

தாய் கண்டித்ததனால் உயிரை மாய்த்த சிறுவன்!

சாவகச்சேரியில் மது போதையில் வீட்டுக்கு சென்ற 14 வயதுச் சிறுவனை தாய் கண்டித்ததன் காரணமாக குறித்த சிறுவன் உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த சிறுவன் ஞாயிற்றுக்கிழமை (12) மாலை மதுபோதையில் வீட்டுக்கு சென்றுள்ளார். அவர் மது போதையில் சென்றதை அவரின் தாயார் கண்டித்துள்ளார்.

இதனால் தவறான முடிவு எடுத்து உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில்,நேற்று காலை அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இறப்பு தொடர்பில் யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular