Wednesday, July 24, 2024
HomeTamilபேரூந்து கட்டணம் மேலும் குறையும்!!

பேரூந்து கட்டணம் மேலும் குறையும்!!

எதிர்வரும் ஜூலை மாதம் மீண்டும் பேரூந்து கட்டணங்கள் திருத்தப்படும் என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேரூந்து கட்டணங்கள் அடிக்கடி நிறுத்தப்படுவதால் மக்களின் நிலை குழப்பத்தில் காணப்படுகிறது.

இதன்போது உதிரிப்பாகங்களின் விலைகளை குறைக்கும் பட்சத்தில், அதன் நன்மையை பயணிகளுக்கு வழங்க முடியும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் கணிசமான அளவு குறையும் பட்சத்தில் ஜூலை மாதம் பேரூந்து பயண கட்டணத்தை குறைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, புதுவருடத்தை முன்னிட்டு, நேற்று நள்ளிரவு முதல், வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

qr code

அதன்படி ஒரு வாரத்திற்காக, பரிந்துரைக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கம் அதிகரிக்கப்படுகிறது.

இதன்படி, முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கம், 5 லீற்றரில் இருந்து 8 லீற்றராகவும், உந்துருளிகளுக்கான எரிபொருள் ஒதுக்கம் 4 லீற்றரில் இருந்து 7 லீற்றராவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளுக்கு, 40 லீற்றரில் இருந்து 60 லீற்றராகவும், மகிழுந்துகள் மற்றும் சிற்றூர்திகளுக்கு 20 லீற்றரில் இருந்து 30 லீற்றராகவும், பாரவூர்திகளுக்கு 50 லீற்றரில் இருந்து 70 லீற்றராகவும், எரிபொருள் ஒதுக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular