Wednesday, July 24, 2024
HomeTamilகொரோனா பரவல் அதிகரிக்கலாம்!!

கொரோனா பரவல் அதிகரிக்கலாம்!!

ஒவ்வொரு நாளும் சுமார் ஏழு கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதால், எதிர்வரும் வெசாக் காலப்பகுதியில் கொரோனா தொடர்பான சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு தொற்றுநோய்வியல் திணைக்களத்தின் வைத்தியர் சமித கினிகே மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், மக்கள் நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெசாக் பண்டிகையின் போது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருந்தால், வைரஸ் பரவல் அதிகரிக்கலாம் என தெரிவித்தார்.

corona
corona

காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், மக்கள் நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular