Saturday, December 9, 2023
HomeTamilமஹிந்தவுக்கான தடை விலக்கப்பட்டது!

மஹிந்தவுக்கான தடை விலக்கப்பட்டது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு 10 நாட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது.

இன்று உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், 2023 ஏப்ரல் 20 முதல் 30 வரையிலான வெளிநாட்டு பயணத் தடையை நீக்கியது.

2022ஆம் ஆண்டு காலி முகத்திடல் மைதானத்தில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டபோதே கோட்டை நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காக தனது சேவைபெறுநரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தென்கொரியாவுக்கு செல்ல வேண்டியிருப்பதால், வெளிநாட்டு பயணத்தடையை நீக்குமாறு அவரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையை கருத்தில் கொண்ட கோட்டை நீதவான் மஹிந்த ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளார்

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular