இந்தியாவின் அகமதாபாத் நகரிலுள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் 13ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று(05) ஆரம்பமாகின்றது.
இந்த போட்டித் தொடர் இந்தியாவின் 10 மைதானங்களில் நடைபெறவுள்ளதுடன், முதலாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.
இங்கிலாந்து அணி கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது.
இந்த நிலையில், இம்முறை நடைபெறும் உலகக்கிண்ண தொடரில் நடப்பு சாம்பியன் அந்தஸ்தைத் இங்கிலாந்து அணி தக்கவைக்கும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது.