Wednesday, July 24, 2024
HomeTamilஷாருக்கான் உயிருக்கு ஆபத்து!!

ஷாருக்கான் உயிருக்கு ஆபத்து!!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ‘பதான்’, ‘ஜவான்’ என இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

இப்படங்களின் வெற்றி மூலம் ஷாருக்கான் ஒரே ஆண்டில் இரண்டு ஆயிரம் கோடி வசூலை கொடுத்த நடிகர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் ஷாருக்கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, மகாராஷ்டிரா போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.

இந்த மிரட்டல் பதான், ஜவான் பட வெற்றிகளால் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு ஷாருக்கானுக்கு 2 போலீசார் மட்டுமே பாதுகாப்பு கொடுத்து வந்துள்ளனர்.

தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதால் ஷாருக்கானுக்கான பாதுகாப்பை ஒய் பிளஸ் தரத்திற்கு போலீசார் உயர்த்தி இருக்கின்றனர்.

அதன்படி ஆயுதம் ஏந்திய ஐந்து போலீசார் ஷாருக்கான் வீட்டிற்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு கொடுப்பார்கள். அதோடு ஷாருக்கானின் பாதுகாப்பிற்காக 6 போலீசார் இருப்பார்கள்.

இதற்கான கட்டணத்தை ஷாருக்கான் வழங்குவார். ஏற்கனவே கொலை மிரட்டல் காரணமாக நடிகர் சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular