Wednesday, July 24, 2024
HomeTamil65 வயது வரை மருத்துவர்கள் சேவையில் நீடிக்க தீர்மானம்!!

65 வயது வரை மருத்துவர்கள் சேவையில் நீடிக்க தீர்மானம்!!

வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களை 65 வயது வரை அரச சேவையில் நீடிக்க அனுமதி வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சுகாதார சேவையில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை குறைக்கும் முயற்சியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக இருந்தாலும், மருத்துவர்களுக்கு 63 வயதுதான்.

புதிய பிரேரணையின்படி, நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்திற்க் கொண்டு, ஒப்பந்த அடிப்படையில் 65 வயது வரை மருத்துவர்கள் சேவையில் இருக்க அனுமதிக்கப்படுவார்கள்.

பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறி வரும் நிலையில் சுகாதார சேவை வீழ்ச்சியடைவதை தடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular