Wednesday, July 24, 2024
HomeTamilதிலீபன் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை !

திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை !

கொழும்பு கோட்டையை அண்மித்த பகுதிகளில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

குறித்த நினைவேந்தலை, 1987ஆம் ஆண்டுக்கு பின்னர் கொழும்பில் முதற்தடவையாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக புலனாய்வு பிரிவினர் தங்களுக்கு அறியப்படுத்தியுள்ளதாக பொலிஸார் இன்று மன்றுரைத்துள்ளனர்.

பொலிஸார் முன்வைத்த கோரிக்கையினை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே, திலீபனின் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதன்படி, மருதானை, கொள்ளுப்பிட்டி, கொம்பனித்தெரு, கோட்டை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நினைவேந்தலை அனுஸ்டிப்பதற்கு கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கத்தை சேர்ந்த அருட்தந்தை சக்திவேல் உள்ளிட்ட தரப்பினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காலிமுகத்திடல், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதியமைச்சு உள்ளிட்ட பகுதிகளுக்குள் குறித்த தரப்பினர் பிரவேசிப்பதற்கு கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே தடையுத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular