Wednesday, July 24, 2024
HomeTamilமகனின் காதலியினது உறவினர்களால் தாக்கப்பட்ட தந்தை !

மகனின் காதலியினது உறவினர்களால் தாக்கப்பட்ட தந்தை !

மகனின் காதலியினது உறவினர்களால் தாக்கப்பட்டகாவல்துறை சார்ஜன்ட்டான தந்தை நேற்று (3)நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் காவல்துறை சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த காவல்துறை உத்தியோகத்தரின் மகன் ஆசிரியராக பணிபுரிகிறார். அவர் திருமணமானவர் என்றாலும் வேறு பெண்ணுடன் திருமணத்துக்கு அப்பாலான தொடர்பினை பேணிவந்துள்ளார். அது தொடர்பில் ஏற்பட்ட தகராறையடுத்து, பொலிஸ் சார்ஜன்ட் வீட்டுக்கு சென்ற சிலர், இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் களுத்துறை வடக்கு காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular