Saturday, July 20, 2024
HomeTamilஇன்று முதல் உர விநியோகிக்கம்!!

இன்று முதல் உர விநியோகிக்கம்!!

எதிர்வரும் பெரும் போகத்துக்காக 21 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரத்தை இன்று முதல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள என்றும் இது தொடர்பில் அரச உர நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சிலோன் உரக் கம்பனி மற்றும் கொழும்பு வர்த்தக உரக்கம்பனி ஆகிய நிறுவனங்களால் விநியோகப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உரத்தை கமநல சேவை நிலையங்களில் இருந்து கொள்வனவு செய்ய முடியும் எனவும் 50 கிலோ கிராம் யூரியா உர மூடை 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இரசாயன உரம் அல்லது சேதன உரங்களை கொள்வனவு செய்வதற்கு ஹெக்டேருக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நெற்பயிர்ச்செய்கை, காய்கறிகள் மற்றும் ஏனைய பயிர்களுக்கும் யூரியா மற்றும் ஏனைய உரங்களை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு அரச உர நிறுவனங்களுக்கு விவசாய அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரியவருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular