Saturday, December 9, 2023
HomeTamil36000 மெட்றிக் தொன் அடங்கிய உரக் கப்பல் நாட்டுக்கு வருகை!

36000 மெட்றிக் தொன் அடங்கிய உரக் கப்பல் நாட்டுக்கு வருகை!

நெற்செய்கைக்கு அவசியமான ட்றிப்பல் சுப்பர் பொசுப்பேற்று உரத்துடனான கப்பல் எதிர்வரும் 17 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 36000 மெட்றிக் டொன் அடங்கிய ட்றிப்பல் சுப்பர் பொசுப்பேற்று அடங்கிய உரக்கப்பல் வருகைத்தரவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் உதவி திட்டத்தின் கீழ் குறித்த உரத்தொகை கிடைக்கப்பெறவுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பொற்றாசியம் மற்றும் பொசுபரஸ் குறைப்பாட்டினால் நெற்கதிகர்கள் மஞ்சல் நிற நோய்க்குட்படுவதை ட்றிப்பல் சுப்பர் பொசுப்பேற்று உரத்தை பயன்படுத்துவது வாயிலாக தடுக்க முடியும் என விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular