Saturday, July 20, 2024
HomeTamilதிரைப்பட இயக்குனரும் நடிகருமான மனோபாலா காலமானார்!

திரைப்பட இயக்குனரும் நடிகருமான மனோபாலா காலமானார்!

நகைச்சுவை நடிகரும், இயக்குநருமான மனோபாலா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 69. மனோபாலா இறந்த செய்தி அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காஞ்சனா, அரண்மனை, சந்திரமுகி, உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் மனோபாலா.

மேலும் விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த 20ற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

ஆகாய கங்கை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகர் மனோபாலா தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் ரஜினிகாந்தை வைத்து 1987யில், ‘ஊர்காவலன்’ என்ற திரைப்படத்தை இயக்கினார்.

கல்லீரல் பிரச்சனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில், சென்னையில் உள்ள தனது இல்லத்தில் அவர் காலமானார்.

இவர் பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் குணசித்திர வேடங்களிலும் காமெடி ரோல்களிலும் நடித்து வந்தவர் மேலும் பல படங்களை இவர் இயக்கியுள்ளார், எனவே இது தமிழ் சினிமாவிற்கு ஒரு பெரிய இழப்பாகவே பார்க்கப்படுகிறது.

வாழ்க்கை நிலையில்லாதது என்பது இது தான் போன்று. மனோபாலாவுக்கு இப்படி திடீர் என்று மரணம் வரும் என்று எதிர்பார்க்கவில்லையே என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular