Wednesday, December 6, 2023
HomeTamilஅமெரிக்கா வழங்கிய ஆயுதங்களுடன் முதல் விமானம் இஸ்ரேல் வந்தடைந்தது!!

அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களுடன் முதல் விமானம் இஸ்ரேல் வந்தடைந்தது!!

ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது எதிர்பாராத வகையில் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தினர்.

இதற்கு இஸ்ரேல் கடுமையான வகையில் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

நேரடியாக போரில் குதிக்கவில்லை என்றாலும், ஆயுதங்கள் வழங்குவதற்கு தயாராக இருந்தது. ஈரான், லெபனானை மிரட்டும் வகையில் போர்க்கப்பலை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி வைத்தது.

இந்த நிலையில் அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களுடன் முதல் விமானம் தெற்கு இஸ்ரேலில் தரையிறங்கியுள்ளது. இந்த தகவலை இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. என்றாலும், என்னென்ன ஆயுதங்கள் என்ற விவரத்தை வெளியிட மறுத்துள்ளது.

இந்த போர் நேரத்தில் இருநாட்டு ராணுவ ஒத்துழைப்பு எங்கள் பகுதியின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரதன்மைக்கு முக்கியமானது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு நான்கு முறை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் டெலிபோனில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular