பல வருடங்களாக தமிழ் மக்களின் இருப்பை கேள்விக் குறியாக்கிய ஒருவரை மீன்பிடித்துறை அமைச்சராக நியமித்திருப்பதும் வடக்கு மக்களின் அடிப்படைப் பொருளாதாரத்தை சீர்குழைக்கும் செயற்பாடு என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சாடியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (22) உரையாற்றிய அவர், இலங்கை கடற்பிராந்தியத்தில் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்படும் செயல், அரசாங்கம் வேண்டுமென்றே வடக்கு பிராந்திய மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் செயல் என்று குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இரண்டு கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வடக்கு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படுமாக இருந்தால் அதற்கு எதிராக தமிழ்த் தேசிய மக்களை அணிதிரட்டி போராட்டம் நடத்துவோம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com