Saturday, July 20, 2024
HomeTamilகாதலனின் கண்முன்னே பலியான காதலி!

காதலனின் கண்முன்னே பலியான காதலி!

கொழும்பு – கண்டி செல்லும் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.

கந்தானை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ரசாஞ்சலி என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

விபத்தின் போது உயிரிழந்த யுவதி தனது காதலனுடன் வரக்காபொல உடுவாக நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்று திரும்பிய போது இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இவர்கள் இருவரும் நேற்று வரகாபொல உடுவக்க நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்று, பின்னர் வீடு திரும்பும் போது பட்டலிய கஜுகம என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, காதலன் கடைக்குச் சென்றுள்ளார்.

தனது காதலன் திரும்பிவரும் வரையில் வீதியோரம் உந்துருளிக்கு அருகில் குறித்த காத்திருந்தபோது, அதிவேகமாக கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்து அவர் மீது மோதியுள்ளது.

அதன்பிறகு பேருந்து அருகிலுள்ள சிறு கால்வாயொன்றில் விழுந்து விபத்துக்குள்ளானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் தமது காதலனை விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இராணுவத்தினருக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டிருந்த குறித்த பேருந்தின் சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular