Wednesday, July 24, 2024
HomeTamilதுப்பாக்கிச் சூடு!!

துப்பாக்கிச் சூடு!!

இன்று காலை மீட்டியாகொட, மாகவெல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 47 வயதுடைய நபர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

காயமடைந்த நபர் சிகிச்சைக்காக பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அம்பலாங்கொடையை வசிப்பிடமாகக் கொண்டவர் .

மீட்டியாகொட பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular