Wednesday, December 6, 2023
HomeTamilமனைவியை கொலை செய்து குழி தோண்டி புதைத்த கணவன் கைது!!

மனைவியை கொலை செய்து குழி தோண்டி புதைத்த கணவன் கைது!!

மனைவியை கொலை செய்து வீட்டின் பின்புறத்தில் புதைத்திருந்த கணவர் ஒருவர் வெல்லம்பிட்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி முள்ளியவளை நீராவிபிட்டி பகுதியில், 22 வயதுடைய பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த பெண் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு குமரபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான நபரொருவரை திருமணம் புரிந்திருந்தார்.

எவ்வாறாயினும், குறித்த பெண்ணிற்கு கடந்த 21 ஆம் திகதி அவரது தாய் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டிருந்தார்.

தொலைபேசி அழைப்பிற்கு உரிய பதில் கிடைக்காததையடுத்து, அவர் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன்போது, தமது மகள் வீட்டில் இல்லாததை அவதானித்த தாய், அது தொடர்பில் முள்ளியவளை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த விசாரணையின்போது, அவரது கணவர் மதுபோதையில் தமது மனைவியை கொலை செய்து புதைத்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன்பின்னர், கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரை முள்ளியவளை காவல்துறையினர் கைது செய்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular