Wednesday, July 24, 2024
HomeTamilநான் பதவி விலக மாட்டேன்- சுகாதார அமைச்சர்!!

நான் பதவி விலக மாட்டேன்- சுகாதார அமைச்சர்!!

மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதி கிடைக்காவிட்டால் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வேன் என அண்மையில் பாராளுமன்றில் தெரிவித்திருந்தமை தொடர்பில் சுட்டிக்காட்டிய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, உரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் பதவி விலகப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

நாங்கள் பாராளுமன்றத்தில் இந்த அறிக்கையை வெளியிட்ட அன்றே திறைசேரி அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினோம், அங்கு மருந்துகள் மற்றும் பிற முக்கியமான மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு நிதி உத்தரவாதம் அளிக்கப்பட்டது என்றார்.

போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், நான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை,” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும்,பாராளுமன்றத்தில் தாம் கூறியதை சில ஊடகங்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளதாகவும், “நிதி வரவில்லை என்றால், பதவிகளில் தொங்குவது மதிப்புக்குரியது அல்ல” என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மருந்து தட்டுப்பாடு குறித்து விசாரித்தபோது, ​​சுமார் 100 மருந்துகள் தற்போது கிடைக்கவில்லை; எவ்வாறாயினும், தேவையான நிதியை விடுவிப்பதன் மூலம் மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular