பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அடுத்த வருடம் முதல் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான காப்புறுதித் திட்டம் அமுல்படுத்தப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
வருடாந்த வரவு – செலவுத் திட்டத்தின் ஒதுக்கீடுகளுடன் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் இந்த திட்டத்தைச் செயற்படுத்துகிறது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் வயது வரம்பில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் சமூக பாதுகாப்பு வரி திருத்தங்களின் பொருட்டு வரித்தொகையில் ஏற்பட்ட மாற்றத்தால், அறவிடப்படும் மதிப்பில் ஏற்பட்ட மாற்றம் என்பனவற்றாலேயே காப்புறுதித் திட்டத் தொகை அதிகரிக்கப்படுவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.