Sunday, December 10, 2023
HomeTamilஏப்ரல் 29 முதல் இந்திய - இலங்கை படகுச் சேவை!

ஏப்ரல் 29 முதல் இந்திய – இலங்கை படகுச் சேவை!

இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகம் மற்றும் காங்கேசன்துறை இடையே படகு சேவை ஏப்ரல் 29 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற இந்த புதிய படகுச் சேவையின் பங்குதாரர்களுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது படகு சேவை உரிமையாளர்கள் கூறுகையில்,

ஒரு வழி பயணத்திற்கு ஒரு பயணிக்கு US$50 வசூலிக்கப்படும். மற்றும் 100 கிலோ நிறையுடைய பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும்.

ஒரு படகு ஒரு நேரத்தில் 150 பயணிகளை ஏற்றிச் செல்லும் மற்றும் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு சுமார் 4 மணி நேரம் பயணம் செய்யும் மற்றும் முதல் கட்ட நடவடிக்கைகளின் போது பகல் நேர செயல்பாடுகள் மட்டுமே நடத்தப்படும்.

படகுச் சேவை திறக்கப்பட்டுள்ளதால், இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த எந்தவொரு தொழில்முனைவோரும் இந்த வாய்ப்பில் இணைந்து கொள்ள முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்

காங்கேசன்துறை துறைமுகத்தின் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த கட்டுமானங்களுக்கு தற்போது இந்தியாவினால் வழங்கப்படும் கடன் மானிய வசதி போதுமானதாக இல்லாததால், இந்தியன் எக்சிம் வங்கியிடம் கூடுதலாக 16 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வசதி கோரப்பட்டுள்ளது” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular