2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 21 ஆவது போட்டி இன்று (22) இடம்பெறுகின்றது.
தர்மசாலாவில் இடம்பெறும் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 273 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக, டேரில் மிட்செல் 130 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் இந்திய அணியின் மொஹம்மட் ஷமி 54 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்தநிலையில், 274 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அணிசார்பில் அதிகபடியாக, விராட் கோலி 95 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில், நியூசிலாந்து அணியின் லொக்கி பெர்குசன் 63 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.