Wednesday, July 24, 2024
HomeTamilஉலகில் ஆறு ஆண்களில் ஒருவர் மலட்டுத்தன்மையால் பாதிப்பு - உலக சுகாதார அமைப்பு!

உலகில் ஆறு ஆண்களில் ஒருவர் மலட்டுத்தன்மையால் பாதிப்பு – உலக சுகாதார அமைப்பு!

உலகம் முழுவதும் 17% க்கும் அதிகமானோர் வாழ்நாளில் மலட்டுதன்மையால் பாதிக்க்பட்டு உள்ளதாகஉலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உலகளவில் ஆறு பேரில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை தொடர்பான பிரச்சனைகள் உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்தார்.

உலகளாவிய சுகாதார அமைப்பு கருவுறுதல் பராமரிப்புக்கான அணுகல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தின் போதே மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘உலகளவில் ஆறு பேரில் ஒருவர் குழந்தை பெற இயலாமையால் ஏதாவது ஒரு சூழ்நிலையில் பாதிக்கப்படுகின்றனர். உலகளவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 17.5 சதவீதம் பேர் மலட்டுத்தன்மை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பணக்கார நாடுகளில் 17.8 சதவீதம் பேரும், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் 16.5 சதவீதம் பேரும் குழந்தை பெற இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனையானது உலகளவிலான மிகப்பெரிய சுகாதார துறை சவாலாக மாறியுள்ளது.

பல நாடுகளின் தரவுகள் இல்லாததால், முழுமையான விபரங்கள் கிடைக்கவில்லை. எனவே இனப்பெருக்க சுகாதார கொள்கைகள், சேவைகள் மற்றும் நிதியுதவி போன்றவற்றை குழந்தையின்மை சிகிச்சையில் சேர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular