Monday, December 4, 2023
HomeTamilபொன்னியின் செல்வன் 2ம் பாகம் தொடர்பில் வெளியான தகவல்!

பொன்னியின் செல்வன் 2ம் பாகம் தொடர்பில் வெளியான தகவல்!

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படம் இரண்டு பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30ம் திகதி உலகம் முழுவதும் 5500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது.

இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். பொன்னியின் செல்வன் 2ம் பாகம் ஏப்ரல் மாதம் 28ம் திகதி வெளியாகும் என்று அறிவித்து அதற்கான ஏற்பாடுகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

சில தினங்களுக்கு முன்பு கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படுவதால் பொன்னியின் செல்வன் 2 ரிலீசை ஒக்டோபர் மாதத்துக்கு தள்ளி வைக்க முடிவு செய்து இருப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதனை படக்குழுவினர் மறுத்து திட்டமிட்டபடி ஏப்ரல் 28 திகதி வெளியாவது உறுதி என்று தெரிவித்தனர்.

பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்தின் டிரைலர் அடுத்த மாதம் 28 திகதி டிரைலர் மற்றும் பாடலை சென்னையில் பிரமாண்ட விழா நடத்தி வெளியிட பரிசீலித்து வருவதாக தெரிவித்தனர்.

மேலும் மார்ச் 30ம் திகதிகளில் நடிகர் நடிகைகளை பல்வேறு நகரங்களுக்கு அழைத்து சென்று படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்யவும் ஏற்பாடுகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடலை ஓரிரு வாரங்களில் வெளியிடவும் திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular