Wednesday, July 24, 2024
HomeTamilவருவாய் உரிமம் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தம்!!

வருவாய் உரிமம் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தம்!!

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படவுள்ளது.

கணினி முறைமையின் புதுப்பித்தலே இந்த இடைநிறுத்தத்திற்கு காரணம் என போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே.சி.என். பெரேரா தெரிவித்துள்ளார்.

நாளை முதல் காலாவதியாகும் வாகன வருவாய் உரிமங்களை ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் அபராதம் செலுத்தத் தேவையில்லாமல் புதுப்பித்துக் கொள்ளலாம் என செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, www.motortraffic.wp.gov.lk இணையத்தளத்தின் ஊடாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவதும் செப்டெம்பர் 24ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வரை இந்த சேவை இடம்பெறாது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular