Wednesday, December 6, 2023
HomeTamilஅமெரிக்கா தூதுவர் - சஜித் சந்திப்பு!!

அமெரிக்கா தூதுவர் – சஜித் சந்திப்பு!!

ஐக்கிய அமெரிக்க குடியரசு தூதுவர் ஜூலி ஜே.சங்கிற்கும் (Julie J.Chung) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை (02) முற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் ஐக்கிய அமெரிக்கா தூதரகத்தின் அரசியல் விவகார அதிகாரி மேத்யூ ஹின்சனும் (Matthew Hinson) கலந்து கொண்டார்.

தற்போதைய இலங்கையின் பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் அவதனாம் செலுத்தி இரு தரப்பினரும் இங்கு கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையினால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் உள்ளிட்ட குழுவினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன் போது விளக்கமளித்தார்.

தற்போதைய அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறி திட்டமிட்ட திகதியில் நடத்த திட்டமிட்டிருந்த தேர்தலை ஒத்திவைத்தல்,மக்களை அடக்கி கொண்டுவர முயற்சி செய்து வரும் பல்வேறு சட்டங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular