இலங்கை முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, பதுளை, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.
இந்த பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் மண் சரிவு குறித்து அப்பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.