Friday, December 8, 2023
HomeTamil'லியோ' படத்திற்காக காத்திருக்கும் கூகுள்

‘லியோ’ படத்திற்காக காத்திருக்கும் கூகுள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார்.

அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், கூகுள் நிறுவனம் தங்களது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது.

அதில். ‘லியோ’ படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர் விஜய்யின் புகைப்படத்தை பகிர்ந்து ‘ஐயம் வெயிட்டிங்’ (Iam Waiting) என்று பதிவிட்டுள்ளது. இந்த பதிவு தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular