Sunday, December 10, 2023
HomeTamilரஜினியை தாக்கினாரா மாரி செல்வராஜ்..?

ரஜினியை தாக்கினாரா மாரி செல்வராஜ்..?

கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி, பேரன்பு படங்களை இயக்கிய இயக்குனர் ராமின் உதவி இயக்குனராக பணியாற்றி அதன்பிறகு கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ்.

இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை இயக்கியிருந்தார்.

மேலும், இவர் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து மாரி செல்வராஜ் இரண்டாவது முறையாக தனுஷுடன் இணையவுள்ளதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், மாரி செல்வராஜ் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், “பெருமைகளும் சாதனைகளும் அடுத்த தலைமுறைக்கு கை மாறும் தருணம் அற்புதமானது” என்று விராட்டின் புகைப்படத்தை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் தொடர்பாக ரஜினியைதான் மாரி செல்வராஜ் கூறுகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

நேற்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் விராட் கோலி தனது 50-வது சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர் சாதனையை இவர் முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular